சிகிச்சைக்காக வந்தவர் பெண் மருத்துவரை கொலை செய்த சம்பவம்: கேரளாவில் அதிர்ச்சி..!

புதன், 10 மே 2023 (11:01 IST)
சிகிச்சைக்காக நோயாளி போல் வந்த ஒருவர் பெண் மருத்துவரை காத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. 
 
கேரள மாநிலம் கொட்டாரகரை என்ற தாலுகாவில் சந்தீப் என்றவர் பெண் மருத்துவர் வந்தனாவிடம் சிகிச்சைக்காக வந்தார். அப்போது அவரிடம் நோய் குறித்து மருத்துவர் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவர் வந்தனாவை சரமாரியாக குத்தினார்.
 
இதனை அடுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்த மருத்துவர் வந்தனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவல் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக வந்து பெண் மருத்துவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
பெண் மருத்துவரை கொலை செய்து தப்பிய சந்தீப் என்பவரையும் தேடி வருகின்றார். இந்த நிலையில் மருத்துவர் வந்தனாவின் கொலையை கண்டித்து கேரளாவில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்