அவர் கிராமத்தின் தலைவருடைய பெண்ணின் மீது காதல் கொண்டு, திருமணம் செய்துக்கொள்ள பெண் கேட்டுள்ளாட். ஆனால் அவருக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த சலீம் சிங், எனக்கு பெண் கொடுக்கவில்லை என்றால் இந்த கிராமம் பெரும் விளைவுகளை சந்திக்கும் என மிரட்டியுள்ளார்.
இதனால் அச்சமடைந்து கிராம மக்கள் இரவோடு இரவாக ஊரை காலி செய்துவிட்டனர். பின் சிறிது நாட்கள் கடந்து மீண்டும் கிராமத்துக்கு வந்துள்ளனர். அப்போது ஊருக்குள் பயங்கரமான சத்தங்கள் கேட்டதாகவும், அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும் நினைத்து மீண்டும் ஊரை விட்டு சென்றுவிட்டனர். அதன்பிறகு தற்போது வரை யாரும் அந்த கிராமத்தில் வசிக்கவில்லை.