தெலுங்கானா மாநிலத்தில், இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவி ஒருவர் தனியார் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், அவரை டிரைவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த டிரைவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் இப்ராஹிம் பட்டினம் என்ற பகுதியில் இயங்கி வரும் இன்ஜினியரிங் கல்லூரியில் 19 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். வழக்கம் போல, தனது தங்கும் அறையில் தூங்கி கொண்டிருந்த அவர், கதவு தட்டும் சத்தம் கேட்டது. தன்னுடன் தங்கியிருக்கும் மற்றொரு மாணவி தான் வந்திருப்பார் என்று நினைத்து கதவை திறந்தார்.
அப்போது, திடீரென உள்ளே வந்த நபர் கதவை உள்புறமாக பூட்டி, அந்த மாணவியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து, கதறி அழுத மாணவி காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில், இந்த சம்பவத்திற்கு டிரைவரே காரணம் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து, தலைமறைவாகியுள்ள அந்த டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.