தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமீபத்தில் பெண் மருத்துவ டாக்டர் பிரியங்கா ரெட்டி, நான்கு பேரால் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து துரித வேகத்தில் செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்தனர்.
அதன்பின்னர், பாராளுமன்றத்திலும் இதுகுறித்து எதிர்கட்சிகள் விவாதம் எழுப்பினர். இந்நிலையில், இன்று அதிகாலை 4 குற்றவாளிகளும் தப்பித்துச் செல்ல முயன்றதாக போலீஸாரால் எண்கவுன்டர் செய்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.