கேரளாவில் கடத்தப்பட்ட சிறுமி மீட்பு!

செவ்வாய், 28 நவம்பர் 2023 (20:31 IST)
கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள கோட்டயம் மாவட்டம் ஒயூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி அபிஹஸ் சாரா ரிஜி. இந்தச் சிறுமி நேற்றுமாலை டியூசன்  வகுப்புக்கு தன் சகோதரனுடன்  நடந்த சென்று கொண்டிருந்தபோது இருவரையும், ஃபாலோ செய்த கும்பம் சிறுமி சாராவை கடத்திச் சென்றனர்.
 
அதன்பின்னர், சிறுமியின் தாய்க்கு போன் செய்த கும்பல் சிறுமியை விடுவிக்க ரூ.5 லட்சம் கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர்.
 
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 
இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி 20 மணி நேரத்திற்குப் பிறகு சிமியை பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
 
கடத்தல்காரர்கள் சிறுமியை கொல்லத்தில் உள்ள பொதுமைதானத்தில் விட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து கடத்தல்காரர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்