ஃபேஸ்புக் பதிவால் தலைமை அர்ச்சகர் சஸ்பெண்ட்: கேரளாவில் பரபரப்பு

வெள்ளி, 23 நவம்பர் 2018 (09:50 IST)
சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவை பதிவு செய்த கேரளாவில் உள்ள தலைமை அர்ச்சகர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக சபரிமலை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சமீபத்தில் கேரள பாஜக பொதுச்செயலாளர் சுரேந்திரன் என்பவர் சபரிமலைக்கு செல்லும்போது தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதுகுறித்து கேரளாவின் லபார் தேவஸ்தான வாரியத்துக்கு கட்டுப்பட்ட கஞ்சன்காடு பகுதியில் உள்ள மதியன் கூலம் சேத்திர பாலகா  கோவிலின் தலைமை அர்ச்சகர் டி மாதவன் நம்பூதிரி என்பவர் தேவஸ்தான அமைச்சரை தனது ஃபேஸ்புக்கில் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த பதிவு பலராலும் பகிரப்பட்டதால் ஒரு விவாத பொருளாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தேவஸ்தான அமைச்சரை விமர்சனம் செய்த தலைமை அர்ச்சகர் மாதவன் நம்பூதிரியை கோவில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. ஆனால் தான் பரம்பரை அர்ச்சகர் என்பதால் தன்னை யாரும் சஸ்பெண்ட் செய்ய முடியாது என்று மாதவன் நம்பூதிரி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்