மோகன்லாலுக்கு மோடி மீது திடீர் காதல் - எதிர்க்கும் வலுப்புகள்

வெள்ளி, 25 நவம்பர் 2016 (09:21 IST)
பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டத்திற்கு கேரள நடிகர் மோகன்லால் ஆதரவு தெரிவித்ததற்கு பல்வேறு கேரள அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


 

 
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதில் புதிய நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார்.
 
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினரும், இது நல்ல திட்டம்தான் என ஒரு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த கேரள நடிகர் மோகன்லால், மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இது தேச நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. எனவே அனைவரும் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
 
மேலும், வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் மக்கள் வரிசையில் நிற்கிறார்கள் என விமர்சிக்கப்படுவதை அவர் கண்டித்தார். மதுபான கடைகள், கோவில்கள் போன்றவற்றில் மக்கள் வரிசையில்தானே நிற்கிறார்கள் என்று கூறியிருந்தார்.
 
அவரின் பேச்சுக்கு கேரள அரசியுஅல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கேரள கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களின் ஒருவரான பன்யன் ரவீந்தரின் இதுபற்றி கூறும்போது “ மோடியின் அறிவிப்பிற்கு மோகன்லால் ஆதரவு தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மோகன்லால் நடித்த படங்களை வெற்றி பெற வைத்த மக்கள்தான் இன்று ஏ.டி.எம். வாசலில் நின்று கொண்டிருக்கின்றனர். அவர்களை அவமதிப்பது போல் பேசக்கூடாது” என தெரிவித்தார்.
 
அதேபோல், கேரள மந்திரி மணி கருத்து தெரிவித்த போது “ மோகன்லாலுக்கு மோடி மீதி திடீர் காதல் வந்துவிட்டது.  அதற்கு காரணம் அவரிடம் இருக்கும் கருப்புப் பணம்தான். அதைக் காப்பாற்றவே அவர் மோடியை ஆதரிக்கிறார்” என்று கூறினார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்