சி.பி.எஸ்.இ பாடத்திட்டங்களில் நீக்கப்பட்ட பாடங்களை சேர்க்க முடிவு: மாநில அரசு அதிரடி..!

ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (09:41 IST)
சிபிஎஸ்சி மற்றும் என்சிஇஆர்டி ஆகிய பாடத்திட்டங்களில் நீக்கப்பட்ட பாடங்களை மாநில அரசின் பாடங்களில் சேர்க்க கேரளா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நேருவின் ஆட்சியின் கீழ் இந்தியா ஆகிய பாடங்கள் சமீபத்தில் சிபிஎஸ்சி  பாடத்திட்டத்தின் என்சிஇஆர்டி பாட புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த பாடங்களை மாநில பாடத்திட்டத்தில் சேர்க்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. கேரள பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் 
 
வரும் கல்வியாண்டில் இருந்து மேற்கண்ட 3 பாடங்களும் மாநில பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று அமைச்சர் சிவன்குட்டி அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்