ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர்: இந்தியா வெற்றி.. ரூ.1.10 கோடி பரிசு அறிவித்த முதல்வர்..!

ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (07:44 IST)
சென்னையில் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று சென்னை எழும்பூர் மைதானத்தில் இந்தியா மற்றும் மலேசியா அணிகள் மோதின.
 
 இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலையில் இருந்தன. இதனை அடுத்து இரண்டாவது பாதியில்  மலேசிய அணி அபாரமாக விளையாடி அடுத்தடுத்து இரண்டு கோல்களை போட்டதால் 3 - 1 என்ற கணக்கில் அந்த அணி சாம்பியன் பட்டத்தை பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் அதன் பிறகு இந்திய அணியின் ஆக்ரோஷமாக விளையாடி  இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்புகளில் இரண்டு கோல்களும் 42வது நிமிடத்தில் ஒரு கோலும் போட்டனர்.  இதனை அடுத்து 4-3 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. 
 
கடந்த 2011, 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் 1.10 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்