இந்த நிலையில் இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கோழிக்கோடு நேஹா ஃபாத்திமா புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத் தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய,ஆசிய,அமெரிக்க,சர்வதேச சாதனைப் புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றிருக்கிறார்.வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். பேர் சொல்லும் பிள்ளை என்பது இதுதானா!