சினிமா விருது விழவை புறக்கணித்த நடிகர்களுக்கு முதல்வர் கண்டனம்

திங்கள், 11 செப்டம்பர் 2017 (17:19 IST)
சினிமா விருதுகள் வழங்குகள் விழாவில் கலந்துக்கொள்ளாத மலையாள நடிகர், நடிகைகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 

 
கேரள அரசு ஆண்டுந்தோறும் சிறந்த திரைக் கலைஞர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த விழா நேற்று இரவு கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் நடைபெற்றது. கடந்த ஆண்டு சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார். 
 
இந்த விழாவில் கலந்துக்கொள்ள பல திரைப்பட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. விருது பெறுபவர்களை தவிர மற்ற நடிகர், நடிகைகள் விழாவில் கலந்துக்கொள்ளவில்லை. இதனால் முதல்வர் பினராயி விஜயன் மிகவும் கோபமடைந்தார். அவரது கண்டனத்தை உரையில் வெளிப்படுத்தினார். விருது வழங்கி முடித்த பின் பேசியவர் கூறியதாவது:-
 
சினிமா என்ற கலையை ஊக்குவிக்க சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விழாவில் விருது கிடைக்காவிட்டலும் கலைஞர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும். விழாவுக்கு தனித்தனியாக அழைக்க வேண்டும் என்று நினைக்க கூடாது. சினிமா கலைஞர்களுக்காக நடத்தப்படும் விழா என நினைத்து அனைத்து கலைஞர்களும் விழாவுக்கு வர வேண்டும் என்றார்.
 
இந்த விழாவை புறக்கணித்த சினிமா கலைஞர்களுக்கு முதலவர் கண்டனம் தெரிவித்துள்ளது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்