பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவர் மற்றும் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ், தனது மகளும், எம்.எல்.சி.யுமான கே. கவிதாவை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்துள்ளார்.
கட்சியின் மூத்த தலைவர்களான டி. ஹரீஷ் ராவ் மற்றும் முன்னாள் எம்.பி. மேகா கிருஷ்ணா ரெட்டி ஆகியோர், தனது தந்தை கே.சி.ஆர். மீது "ஊழல் முத்திரை" குத்துவதாகவும், அவரை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் கவிதா பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி, கவிதா வெளிநாட்டில் இருந்தபோது, தெலங்கானா போகு கனி கார்மிகா சங்கம் என்ற தொழிலாளர் சங்கத்தின் கௌரவ தலைவர் பதவியிலிருந்து அவர் திடீரென நீக்கப்பட்டார். இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், தன்னை கட்சியிலிருந்து ஓரங்கட்ட சதி நடப்பதாகவும் கவிதா குற்றம் சாட்டினார்.