ஆந்திர அரசை கலைக்க வேண்டும்: தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு தாவிய கட்ஜு!!

வியாழன், 18 மே 2017 (12:43 IST)
முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டய கட்ஜு பிரதமர், ஜனாதிபதிக்கு ஆந்திர அரசை கலைக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளார்.


 
 
ஐதராபாத்தைச் சேர்ந்த ரவிகிரண் என்பவர் சமூக வலைதளங்களில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் பற்றியும் கேலி கார்ட்டூன்களை வெளியிட்டார். 
 
இதனால், ஆந்திர அரசு ரவி கிரணை கைது செய்து பின்னர் விடுவித்து. இது தொடர்பாக மார்கண்டய கட்ஜுக்கு பல்வேறு புகார்கள் சென்றன.
 
எனவே, தனிமனிதனுக்கு தனது கருத்தை சொல்ல சட்டப்படி உரிமை உண்டு. ஆனால் ஆந்திர அரசு தனி மனித சுதந்திரத்தை பறிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே ஆந்திர அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கட்ஜு கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்