கடும் பனிப்பொழிவு; சாலையை மூடிய பனி! – ராணுவ வாகனத்தில் பிறந்த குழந்தை!

செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (10:57 IST)
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ராணுவ வாகனத்திலேயே குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடுமையான குளிர்காலம் நிலவி வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள நரிகூட் பகுதியில் வாழ்ந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி கண்டுள்ளது. அந்த பகுதிக்கு போக்குவரத்து வசதிகள் கிடையாது என்பதால் அப்பகுதியை சேர்ந்த சுகாதார பணியாளர் சாதியா பேகம் இந்திய ராணுவத்தின் கலரூஸ் கம்பெனி படை பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக நரிகூட் விரைந்த ராணுவம் பெண்ணை ராணுவ வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை விரைந்துள்ளது. ஆனால் அதற்குள் கர்ப்பிணி பெண்ணுக்கு வலி அதிகமாகவே வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்த சொல்லி சாதியா பேகமே அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். கடும் பனி பொழிவு உள்ளிட்ட இடர்பாடுகளுக்கு நடுவே அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ராணுவ வாகனத்தில் பெண் குழந்தை பிறந்த சம்பவம் வைரலாகியுள்ளது. உரிய நேரத்தில் உதவிக்கு வந்த ராணுவத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்