”திப்பு சுல்தான் வரலாறு, இனி பாடப்புத்தகங்களில் கிடையாது” ..

Arun Prasath

வியாழன், 31 அக்டோபர் 2019 (12:04 IST)
கர்நாடக அரசு திப்பு சுல்தானின் வரலாற்றை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மைசூரின் புலி என்று வரலாற்றாசிரியர்களினால் அழைக்கப்படும் திப்பு சுல்தான், 1700களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மைசூர் ராஜ்ஜியத்தின் மன்னர் ஆவார். இவரை குறித்த வரலாறுகள் தவறானவை என பாஜகவினர் பல வருடங்களாக கூறிவருகின்ற நிலையில், தற்போது கர்நாடகாவில் உள்ள பாஜக அரசு , திப்பு சுல்தான் வரலாற்று பாடத்தை, நடுநிலைப்பள்ளி பாடப்புத்தகங்களிலிருந்து நீக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பிஜேபி எம்.எல்.ஏ. அப்பச்சு ராஜன், “திப்பு சுல்தானை நாங்கள் பாடப்புத்தகங்களில் இருந்து நீக்குவதற்கான ஆலோசனையில் உள்ளோம்” என கூறியுள்ளார். மேலும் இது குறித்து கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, “கர்நாடகா அரசு திப்பு சுல்தானின் வரலாற்றை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க ஆலோசித்து வருகிறது” என கூறியுள்ளார். எடியூரப்பா எப்பொழுதும் திப்பு சுல்தானை வரலாற்று நாயகனாக நம்பியதில்லை என கூறப்படுகிறது.

திப்பு சுல்தான் மீது பாஜகவினர் வைக்கும் குற்றச்சாட்டாக கூறப்படுவது என்னவெனில், ”திப்பு சுல்தான் பலரை இஸ்லாம் மதத்திற்கு வலுகட்டாயமாக மாற்றினார், அவர் பெர்சிய மொழியை ஆட்சி மொழியாக வைத்திருந்தார்” என்பது தான்.

திப்பு சுல்தானின் வரலாற்று பாடத்தை நீக்குவது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸை சேர்ந்த முன்னாள் கர்நாடகா முதல்வர் சித்தராமையா “திப்பு சுல்தானின் வரலாற்றை நீக்குவதென்பது, வரலாற்றை மொத்தமாக சிதைப்பதற்கு சமமாகும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்