கர்நாடகாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (20:28 IST)
கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 332 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 515 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
மேலும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 9712 என்றும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த என்ணிக்கை 29,81,732 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,529 என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது
கர்நாடக மாநில சுகாதாரத்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக மாநிலத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து வருகிறது என்பதும் தமிழகத்தை விட அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது