போலீஸ் இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

செவ்வாய், 18 அக்டோபர் 2016 (14:49 IST)
கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகில் உள்ள மாலூர் காவல் நிலையத்தில் பணி புரியும் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள, இந்த மாலூர் காவல் நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராகவேந்திரா(44).  இவர் நரசபுரா என்ற பகுதியில் வசித்து வருகிறார்.
 
இவர் இதற்கு முன் பெங்களூர் புறநகர் பகுதியான சர்ஜாபுரா, நந்தகுடி காவல் நிலையங்களில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்ற அவர், இந்த காவல் நிலையத்திற்கு வந்துள்ளார்.  கொலை வழக்குகளை துப்பறிந்து கொலையாளியை கண்டுபிடிப்பதில் இவர் கை தேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில், நேற்ற இரவு பணிக்கு வந்த அவர், அதிகாலையில் தனது அறைக்குள், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், தனது மரணத்திற்கு யாரும் காரணமல்ல என்று எழுதி வைத்துள்ளார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
 
சமீபகாலமாக போலீஸ் அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்