ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானை நோக்கி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தயாராக உள்ளேன் என கர்நாடக அமைச்சர் பி.ஏஸ். சமீர் அக்மத் கானின் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்களை சந்தித்த போது அவர், "பாகிஸ்தான் எப்போதும் இந்தியாவின் எதிரியாகவே இருந்தது. மோடி மற்றும் அமித் ஷா அனுமதி அளித்தால், நான் பாகிஸ்தான் சென்று, என் உடலில் தற்கொலை குண்டு கட்டிக்கொண்டு தாக்குதல் நடத்த தயார். போர் செய்வதற்காகவே போகிறேன்,"
எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் இந்தியர்கள், உண்மையான ஹிந்துஸ்தானிகள். பாகிஸ்தான் எப்போதும் நம்மை எதிர்த்துதான் நடந்து வந்திருக்கிறது. நம் நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரையும் கொடுக்க தயார்,” என்று கூறியுள்ளார்.