நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது: அண்டை மாநிலம் அறிவிப்பு

புதன், 22 ஏப்ரல் 2020 (17:41 IST)
நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதிலும் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் ஒருசில துறைகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் இதுகுறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து கேரளா உள்பட ஒருசில மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் கர்நாடகத்தில் நாளை முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அதாவது ஏப்ரல் 23 முதல் கர்நாடகா மாநிலத்தில் அத்தியாவசிய சேவைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு தளர்த்தப்படுவதாகவும், ஆனால் அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் ஹாட்ஸ்பாட் பகுதிகள் என மத்திய அரசு அறிவித்த பகுதிகளில் ஊரடங்கு தளர்வு கிடையாது என்றும் கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது.
 
இந்த ஊரடங்கு தளர்வு என்பது கட்டுமானத்துறை, சிமெண்ட், இரும்பு, டைல்ஸ், பெயிண்ட், செங்கல் ஆகியவை தயாரிக்கும் ஆலைகள் மற்றும் அதற்கான வாகன போக்குவரத்துக்கள் ஆகியவைகளுக்கு தளர்வு உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருசில துறைகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மதுபானம் விற்பனை செய்யும் கடைகளுக்கு தளர்வு இல்லை என்றும் மே 3ஆம் தேதி வரை அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்