முன்னாள் முதல்வர் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவமனை விளக்கம்..!

வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (13:21 IST)
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பெங்களூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கர்நாடக மாநிலம் முன்னாள் முதல்வர் குமாரசாமி பெங்களூரு ஜெயநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சற்றுமுன் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
அவர் உடல் நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் கர்நாடக மாநில அரசியல் பிரமுகர்கள் சமூக வலைதளங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்