பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்த முதலமைச்சர்.. என்ன காரணம்?
ஞாயிறு, 18 ஜூன் 2023 (09:24 IST)
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெரியாருக்கு மிகப்பெரிய மதிப்பு மரியாதையும் தந்து கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பெரியார் முகம் பொரித்த செங்கோலை வாங்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் நடந்த விழா ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பினர் பெரியார் முகம் குறித்த செங்கோலை முதல்வர் சித்தராமையாவுக்கு கொடுத்தனர். அப்போது அந்த செங்கோலை முதல்வர் சித்தராமையா வாங்க மறுத்துவிட்டார்.
இது குறித்து அவர் விளக்கம் அளித்த போது செங்கோல் என்பது அரசு மரபை போற்றும் ஒன்று அதனால்தான் பாஜக நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதை எதிர்த்தோம் என்று கூறி பெரியார் முகம் பொரித்த செங்கோலை அவர் வாங்க மறுத்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.