இந்தியா கூட்டணிக்கு செல்கிறதா தெலுங்கு தேசம்? சந்திரபாபு நாயுடுவிடம் கார்கே பேச்சு..!

Mahendran

செவ்வாய், 4 ஜூன் 2024 (15:29 IST)
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக உறுதியாக வெற்றி பெறும் என்று கிட்டத்தட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறிய நிலையில் கருத்துக்கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கி விட்டு இந்தியா கூட்டணி கிட்டத்தட்ட ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளை நெருங்கிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தற்போதைய தகவலின் படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 241 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சியை 35 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 தொகுதிகளிலும், திமுக 21 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
 
மேலும் பாஜக கூட்டணி மொத்தம் 295 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில் இந்தியா கூட்டணி 231 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இன்னும் ஆட்சி அமைக்க இந்தியா கூட்டணிக்கு 42 தொகுதிகள் மட்டுமே தேவை என்ற நிலையில் சில பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அதன்படி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி 16 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில்  சந்திரபாபு நாயுடு உடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே பேச்சுவார்த்தை நடைபெற்று நடத்தி வருவதாகவும் இந்த பேச்சு வார்த்தையின் முடிவில் உடன்பாடு ஏற்பட்டு அவர் இந்தியா கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அமைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணி பக்கம் செல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்