கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு!

திங்கள், 26 ஜூலை 2021 (09:49 IST)
த்ராஸ் பகுதியில் இன்று நடைபெறும் கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார். 

 
பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எல்லைக்குட்பட்ட கார்கில் பகுதியை ஆக்கிரமித்ததால் 1999ல் இருநாடுகளுக்கிடையே போர் மூண்டது. இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடைபெற்ற கார்கில் யுத்தத்தில் இந்தியா வெற்றிப்பெற்றதை தொடர்ந்து போர் முடிந்தது. போரில் இந்தியா வென்ற ஜூலை 26ம் தேதி கார்கில் நினைவு தினமாக கொண்டாடப்படுகிறது.
 
இதன் 22 வது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி லடாக்கின் த்ராஸ் பகுதியிலுள்ள நினைவுச் சின்னத்தில் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த 559 வீரர்களை நினைவுகூறும் வகையில் 559 விளக்குகள் ஏற்றப்பட்டன. இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.
 
த்ராஸ் பகுதியில் இன்று நடைபெறும் கார்கில் வெற்றி தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்கிறார். அப்போது இந்திய ராணுவத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் அவர் பேச இருக்கிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்