பகவத் கீதையால் சுதந்திர போராட்டம் நடந்ததா? – கர்நாடக அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

புதன், 21 செப்டம்பர் 2022 (09:05 IST)
கர்நாடக பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை இணைப்பதற்கான காரணம் குறித்து அமைச்சர் அளித்துள்ள விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் சமீப காலமாக அம்மாநில பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெறும் தகவல்கள் சர்ச்சையை சந்தித்து வருகின்றன. சமீபத்தில் சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்து புல்புல் பறவைகள் மூலமாக இந்தியா பறந்து வந்து சென்றதாக இடம்பெற்ற தகவல் சர்ச்சையானது.

அதை தொடர்ந்து தற்போது பாடத்திட்டத்தில் பகவத் கீதையை இடம்பெற செய்யும் அரசின் முயற்சிக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் “பகவத் கீதை மதரீதியான நூல் அல்ல. மாணவர்களுக்கு அறநெறியையும், ஊக்கமளிக்கும் கருத்துகளையும் கற்பிக்கும் கருத்துகள் கீதையில் உள்ளன. சுதந்திர போராட்டக்காலத்தில் பலரும் பகவத் கீதையை படித்து உத்வேகம் கொண்டு சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டனர்” என்று கூறியுள்ளார்.

இவரது இந்த கருத்து கர்நாடக எதிர்கட்சிகளிடையே மேலும் சர்ச்சையையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்