ஏர் இந்தியாவில் பயணிக்க வேண்டாம்: காலிஸ்தான் இயக்கம் மிரட்டலால் பரபரப்பு..!

வெள்ளி, 10 நவம்பர் 2023 (12:27 IST)
ஏர் இந்தியாவில் நவம்பர் 19ஆம் தேதிக்கு பின்னர் பயணம் செய்ய வேண்டாம் என காலிஸ்தான்  இயக்கம் மிரட்டல் எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
இந்த மிரட்டல் காரணமாக ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் கூடுதலாக மேற்கொள்ளப்படும் என வெளியுறவு செய்து தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் பயங்கரவாத சக்திகளுக்கு இடம் அளிக்க கூடாது என்றும் பல்வேறு நாடுகளிலும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 19-வது 19ஆம் தேதிக்கு பிறகு ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் என்று சீக்கிய காலிஸ்தான் இயக்கம் மிரட்டல் வைத்துள்ளது. 
 
பயணிகளுக்கு நேரடியாக விடுபட்ட இந்த மிரட்டலை அடுத்து டெல்லி மற்றும் பஞ்சாப் விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்து விமானங்களும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே கிளம்பும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்