ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தன்னைக் கைது செய்யாமல் இருக்க, ப.சிதம்பரம் தொடுத்திருந்த முன்ஜாமீன் மனுவைக் கடந்த 6 மாத காலமாக தள்ளிப்போட்டுக் கொண்டிருந்த நீதிபதி சுனில் கவுர் தான் ஓய்வுப் பெறப்போகும் இரண்டு நாட்களுக்கும் முன்பு ஜாமீன் அளிக்க முடியாது என தீர்ப்பளித்தார்.
இதன் பின் ப.சிதம்பரம் கைதுசெய்யப்பட்டு சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது ஓய்வு பெற்றுவிட்ட சுனில் கவுர் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி அவர் இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள இருக்கிறார். இது தேசிய ஊடகங்களில் பரவலாகக் கவனம் பெற்றுள்ளது.