கர்ணனை காணவில்லை! ஏமாற்றத்துடன் திரும்பிய கொல்கத்தா போலீஸ்

வியாழன், 11 மே 2017 (04:42 IST)
சர்ச்சைக்குரிய உத்தரவுகளை பிறப்பித்த கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனை கைது செய்து ஆறு மாதம் சிறையில் அடைக்க உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் உத்தரவிட்ட நிலையில் நேற்று நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர். ஆனால் சென்னையில் உள்ள அவரது க்ரீன்வேஸ் வீட்டில் அவர் இல்லை.



 


இதனையடுத்து அவர் ஆந்திராவில் உள்ள காளகஸ்தியில் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கொல்கத்தா போலீசார் ஆந்திரா சென்றனர். ஆனால் அங்கும் அவர் இல்லாததால் ஏமாற்றமடைந்த கொல்கத்தா காவல்துறையினர் பின்னர் மீண்டும் சென்னை திரும்பினர். மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அவர்கள் சென்னை போலீசாருடன் ஆலோசனை செய்து வருகின்றனர்

நீதித்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் ஒரு நீதிபதியே தலைமறைவாகியிருப்பதும், போலீசார் அவரை கைது செய்ய தேடி வருவதும் நீதித்துறையின் மீது இருக்கும் நம்பிக்கையை குறைக்கும் வகையில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்