ஆயிரம் நகரங்களில் 5ஜி நெட்வொர்க்; ஆஃபரும் உண்டு! – ரெடியாகும் ஜியோ!

செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (11:37 IST)
5ஜி அலைவரிசைக்கான ஏலத்தில் ஜியோ நிறுவனம் உரிமம் பெற்றுள்ள நிலையில் 5ஜி அலைவரிசை சேவையை தொடங்க ஆயத்தமாகி வருகிறது.

இந்தியாவில் தற்போது 4ஜி அலைவரிசை சேவைகள் புழக்கத்தில் உள்ள நிலையில் 4ஜியை விட 10 மடங்கு இணைய வேகம் கொண்ட 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

சமீபத்தில் மத்திய அரசு 5ஜி சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலத்தில் விட்டது. இந்த ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி நெட்வொர்க் உள்ளிட்ட நிறுவனங்கள் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தன.

ஏலத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் முதல் ஆளாக 5ஜி சேவையை விரிவுப்படுத்துவதற்கான வேலைகளில் ஜியோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதற்கட்டமாக இந்தியா முழுவதும் ஆயிரம் நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட உள்ளது. இதற்கான தொழில்நுட்ப கருவிகள் பொருத்தும் பணியை ஜியோ விரைவில் தொடங்குகிறது.

மேலும் வாடிக்கையாளர்களை 5ஜி சேவையை நோக்கி ஈர்ப்பதற்காக சிறப்பு சலுகைகளையும் ஜியோ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்