மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே அரசு இதுபோன்ற திட்டங்களை ஏற்படுத்துவதாக விவசாயிகள் இடையே பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமான கடைகள், பொருட்களை கண்டால் துவம்சம் செய்து விடுகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் ஜியோவுக்கு எதிரான மனநிலையே உள்ளது.