மீண்டும் இந்தியாவில் ஜிகா வைரஸ்: சுகாதார அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!

திங்கள், 25 அக்டோபர் 2021 (17:42 IST)
இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஜிகா வைரஸ் தோற்று கான்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உயர்மட்ட குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது 
 
பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள், மகளிர் நோய் நிபுணர்கள், தொல்லியல் நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய குழு கான்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு எடுக்கும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
கான்பூரில் சமீபத்தில் 57 வயது விமான படை அதிகாரி ஒருவர் ஜிகா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் அவருக்கு ரத்த மாதிரிகள் சோதனை செய்தபோது ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்