குறிப்பாக பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது என கூறினாலும் கூட பல மாணவர்கள் அதை பின்பற்றுவது இல்லை. கொரோனா காலத்தில் இணையவழி கல்விக்காக மாணவர்கள் செல்போன் பயன்படுத்திய நிலையில் அதனை தற்போது பள்ளி வகுப்பறைக்கும் எடுத்து சென்று பயன்படுத்துகின்றனர். மேலும் பாடங்களை கவனிக்காமல் செல்போனில் விளையாடி பொழுதை கழிக்கின்றனர். இது மாணவர்களின் கல்வி கற்கும் திறனை பாதிக்கும்.
இந்நிலையில் தான் பள்ளி மாணவிகள் தெருவில் நின்று தலைமுடியை பிடித்து இழுத்து ஒருவரையொருவர் பயங்கராமாக தாக்கி கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற பிஷப் காட்டன் பள்ளி மாணவிகள் தான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி சீருடையில் அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொள்கின்றனர்.
மேலும் நடைபாதையில் மாணவியை கீழேதள்ளி சண்டையிட்டு கொள்கின்றனர். மேலும் படிக்கட்டில் இறங்கும் மாணவியின் தலைமுடியை பிடித்து ஆக்ரோஷமாக இன்னொரு மாணவி இழுத்து தகராறில் ஈடுபடுகிறார். இதனை பார்த்த பொதுமக்கள் மாணவிகளை தடுக்க முயல்கின்றனர். இருப்பினும் மாணவிகள் தொடர்ந்து ஒருவைரையொருவர் தாக்கி கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் பள்ளி மாணவிகள் இப்படி பொதுவெளியில் குடுமிப்பிடி சண்டையிட்டு கொள்கின்றனரே என வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.