மீனவருக்கு அடித்த ஜாக்பாட் - ஒரே மீன் 5.5 லட்சத்திற்கு ஏலம்

செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (13:08 IST)
மும்பையில் மீனவர் ஒருவர் பிடித்த அரிய வகை மீன் ஒன்று ரூ.5.5 லட்சத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த மீனவர்களான மகேஷ், பரத் ஆகிய இரு சகோதரர்கள் தங்கள் படகை எடுத்துக் கொண்டு கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
 
அப்போது அவர்கள் வலையில் அரிய வகை மீனான கோல் மீன் சிக்கியுள்ளது. 30 கிலோ எடை கொண்ட அந்த மீன் ஏலத்தில் ரூ.5.5 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
 
இந்த கோல் மீனில் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளது. இந்த மீன்கள் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் ஆகிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 
இதுபற்றி பேசிய மகேஷ், பரத் சகோதரர்கள் இந்த வகை மீன்கள் கிடைப்பது கடலில் லாட்டரி அடிப்பது போன்றது. அது எங்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்த பணத்தை வைத்து படகுகள் மற்றும் வலைகளை சரி செய்வேன் என அவர்கள் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்