இவாங்கா டிரம்பின் லைவ் வீடியோ: தனியார் தொலைக்காட்சியில் கசிந்ததால் பரபரப்பு!!

சனி, 2 டிசம்பர் 2017 (11:44 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். இவாங்கா ட்ரம்ப் அண்மையில் வெள்ளை மாளிகை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஐதராபாத்தில் நடைபெற்ற உலக தொழில் முனைவோர் மாநாட்டில் இவாங்கா கலந்து கொண்டார். இதனையடுத்து ஐதராபாத்தில் உள்ள நிஜாம் மன்னர் பரம்பரைக்கு சொந்தமான மார்பிள் பலாக்னுமா அரண்மனையில் இவாங்காவுக்கு டின்னர் வழங்கப்பட்டது. 
 
இந்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடியும் இவாங்காவுடன் சேர்ந்து இரவு உணவு உட்கொண்டார். அவர்கள் சாப்பிடும் காட்சி தெலுங்கு தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் அரண்மணையில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
 
இதனை கவனித்த பிரதமர் அலுவலக அதிகாரிகள் உடனடியாக அந்த செய்தி நிறுவனத்தை தொடர்பு கொண்டு உடனே நேரடி ஒளிபரப்பை நிறுத்துமாறு கூறினார். இதனையடுத்து லைவ் ஒளிபரப்பை நிறுத்தப்பட்டது.
 
இந்நிலையில், எப்படி அரண்மனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு கிடைத்தன என்பது புரியாத புதிராய் உள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்