உலகில் அனைத்து தலைவர்களாலும் விரும்பப்படுபவர் பிரதமர் மோடி: இத்தாலி பிரதமர் புகழாரம்

வியாழன், 2 மார்ச் 2023 (14:40 IST)
உலகில் அனைத்து தலைவர்களாலும் விரும்பப்படுபவர் பிரதமர் மோடி: இத்தாலி பிரதமர் புகழாரம்
உலகின் அனைத்து தலைவர்களாலும் விரும்பப்படுபவர் இந்திய பிரதமர் மோடி என இந்தியா வந்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ள நிலையில் அவருக்கு பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு கொடுத்தார். இந்த நிலையில் ஜார்ஜியா மெலோனி செய்தியாளர்களிடம் பேசிய போது அரசியல் வர்த்தகம் மற்றும் பொருளாதார குறித்து இந்திய பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன் என்றும் உலகம் முழுவதும் அனைத்து தலைவர்களாலும் அதிகம் விரும்பப்படுபவர்களில் ஒருவர் பிரதமர் மோடி என்றும் அவர் தெரிவித்தார். 
 
அவர் உலகின் ஒரு மிகப்பெரிய தலைவராக இருக்கிறார் என்பது உண்மையாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இத்தாலி நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ள ஜார்ஜியா மெலோனியின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்