முக ஸ்டாலினை ஏன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கூடாது என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா அவர்கள் பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் 70-வது பிறந்தநாள் விழா இன்று சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உத்தர பிரதேச மாநிலம் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிகள் பேசிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை ஏன் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார். ஏன் அவரால் பிரதமராக முடியாதா? அவர் பிரதமர் ஆனால் என்ன தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.