கடைசி சுற்றையும் வெற்றிகரமாக முடித்த சந்திரயான் 3! – தரையிறங்குவது எப்போது?

ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:25 IST)
நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் நிலவை சுற்றும் கடைசி சுற்றுகளை முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



நிலவின் தென் துருவத்தில் நீர் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது. பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வந்து அதிலிருந்து நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த சந்திரயான் 3 நிலவின் புகைப்படங்கள், வீடியோக்களை பூமிக்கு அனுப்பியது.

தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் உள்ள சந்திரயான் 3 கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுவட்ட பாதையை குறைத்து நிலவில் தரையிறங்கும் ப்ராசஸில் உள்ளது. அந்த வகையில் சந்திரயான் 3 விண்கலத்தின் இறுதி வேக குறைப்பு செயல்பாடு வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரோ “இரண்டாவது மற்றும் இறுதி டீபூஸ்டிங் செயல்பாடு LM சுற்றுப்பாதையை 25 கிமீ x 134 கிமீக்கு வெற்றிகரமாக குறைத்துள்ளது. தொகுதி உள் சோதனைகளுக்கு உட்பட்டு, நியமிக்கப்பட்ட தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயத்திற்காக காத்திருக்கும். இயங்கும் இறங்குதல் ஆகஸ்ட் 23, 2023 அன்று சுமார் 1745 மணிநேரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்