ராமர் கோவில் திறக்கும்போது முஸ்லீம்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்: சர்ச்சை பேச்சு

Mahendran

ஞாயிறு, 7 ஜனவரி 2024 (09:48 IST)
ராமர் கோவில் திறக்கும்போது முஸ்லீம்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் பயணத்தை தவிர்க்கவும் என்றும் முஸ்லீம் மதத்தின் தலைவர்களில் ஒருவரான  பத்ருதீன் அஜ்மல் என்பவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் அவர் கூறிய போது ’ஜனவரி 20 முதல் 25 வரை முஸ்லீம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் பேருந்துகள் மற்றும் ரயில்கள் விமானங்களில் செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.  
 
நாம் அமைதி காக்க வேண்டும் என்றும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் இந்த காலகட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவித்துள்ளார் 
 
இந்த ஐந்து நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் முஸ்லிம்களின் பெரிய எதிரியாக பாஜக உள்ளது என்றும் நம்முடைய வாழ்க்கை, நம்பிக்கை, மசூதிகள் சட்டங்கள் ஆகிவிட்டது எதிரியாக பாஜக உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார். அவரது சர்ச்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்