கமல் சார் என் வாழ்க்கையில் யுடர்ன் போட்டார்!!. அவரை மறக்கமாட்டேன்!.. வடிவேலு ஃபீலிங்...

BALA

வெள்ளி, 6 மார்ச் 2026 (14:30 IST)
தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ராஜ்கிரண் அலுவலகத்தில் ஆபீஸ் பாய் போல வேலை பார்த்தவர் வடிவேலு.. ராஜ்கிரன் தயாரித்து நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் ஒரு சின்ன வேடத்தில் வடிவேலுவை நடிக்க வைத்திருந்தார். அதன்பின் சிங்காரவேலன், சின்ன கவுண்டர் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.. ஆனால் வடிவேலுவை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது தேவர் மகன் படத்தில் இடம் பெற்ற இசக்கி கதாபாத்திரம்தான்..

அதற்கு முன் காமெடி வேடங்களில் நடித்த வடிவேலு அந்த படத்தில் ஒரு குணச்சித்திர நடிகராக நடித்திருந்தார்.. அதுவும் சிவாஜியுடன் நடிக்கும் வாய்ப்பெல்லாம் அந்த படத்தில் அவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் வடிவேலுவின் நடிப்பை பார்த்து சிவாஜியே பாராட்டினார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய வடிவேலு ‘என் வாழ்க்கையில் யுடர்ன் போட்டது கமல் சார்தான்.. அவரை சாகும் வரை மறக்க மாட்டேன். தேவர் மகன் படத்தில் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை கொடுத்தார்.. அதன்பின் ஒரு படத்தில் அவரோடு நடிக்க முடியாமல் போனபோது  ‘இனிமேல் வடிவேல் எனக்கு கிடைக்க மாட்டார்..

அவர் பிஸியாயிடுவார்’ என கமல் சொன்னார்.  அவர் சொன்ன வாய் முகூர்த்தம் அப்படியே நடந்தது.. அவர் ஒரு தீர்க்கதரிசி.. அவருக்கு கடவுள் பிடிக்காது.. ஆனா கடவுளுக்கு அவரை பிடிக்கும்.. அவர் ஒரு மகான்’ என ஃபீலிங்காக பேசியிருக்கிறார் வடிவேலு..

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்