சில மாநிலங்களில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரொனா 3 வது அலை வரும் ஆகஸ்ட் மாதம் கடைசியில் ஆரம்பித்து, அக்டோபர் மற்றும் நவம்பர் மாத தொடக்கத்தில் சுச்சம் அடைய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகிறது.
மேலும் கோவிட் தொற்றிற்கு ஊசியில்லாத தடுப்பு மருந்தான கெடிலாவுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படவுள்ளது. இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் தயாராகும் கெடிலா என்ற நிறுவனத்தின் தடுப்பு மருந்திற்கு அனுமதி கிடைத்தால் இந்தியாவில் இது 6 வதாக மக்களின் பயன்பாட்டிற்கு வரும்ம மருந்து ஆகும். மேலும் ஜைடஸ் கெடிலா நிறுவனத்தில் தடுப்பூசி 3 டோஸ்களை கொண்டது குறிப்பிடத்தக்கது.