கேதர்நாத் கோயிலுக்குள் தங்கத் தகடுகள் கொடுத்த தொழிலதிபர்: அர்ச்சகர்கள் எதிர்ப்பு!

ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (12:49 IST)
கேதர்நாத் கோயிலுக்குள் தங்கத் தகடுகள் கொடுத்த தொழிலதிபர்: அர்ச்சகர்கள் எதிர்ப்பு!
உலகப் புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு தங்கத் தகடுகளை தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக கொடுத்த நிலையில் அந்த கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் கேதார்நாத் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுவார்கள் என்பது உலகப்புகழ் பெற்ற இந்த கோயிலுக்கு தொழிலதிபர் ஒருவர் தங்கத் தகடுகளை நன்கொடையாக அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் கோயிலின் கருவறைக்குள் தங்க தகடுகள் பொருத்துவதற்கு அந்த தொழிலதிபர் இந்த நன்கொடையை அளித்துள்ளார். ஆனால் இதற்கு கேதார்நாத் கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் 
 
பாண்டவர்கள் நினைத்திருந்தால் தங்கத்தில் மட்டுமல்ல வைரத்திலேயே இந்த கோவிலை கட்டி இருக்கலாம் என்றோம் எனவே பாண்டவர்கள் அமைத்த இந்த கோயிலின் அமைப்பை மாற்றுவது கோயிலின் அர்த்தத்தையே மாற்றுவதாகும் என்றும் இந்த தங்கத் தகடுகளை பதிக்க கூடாது என்றும் அந்த அர்ச்சகர்கள் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்