’இம்ரான் கானை விடுதலை செய்’ : இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் தோன்றிய விமானம்! – வைரல் வீடியோ!

Prasanth Karthick

திங்கள், 10 ஜூன் 2024 (09:51 IST)
இந்தியா – பாகிஸ்தான் உலக கோப்பை போட்டி நடைபெற்றபோது இம்ரான் கானை விடுவிக்க கோரிய வாசகங்களோடு விமானம் ஒன்று பறந்த வீடியோ வைரலாகியுள்ளது.



உலகக்கோப்பை டி20 போட்டியின் லீக் போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் இந்திய அணி பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது.

இந்த போட்டிக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்ததால் பாதுகாப்பு பலமாக இருந்தது. இந்நிலையில் இந்த போட்டிகள் நடந்துக் கொண்டிருந்த பகுதியில் குட்டி விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது. அதில் “Release Imran Khan” என்ற வாசகம் அடங்கிய டேக் பின்னால் பறந்துக் கொண்டிருந்தது. இந்த விமானம் எங்கிருந்து இயக்கப்பட்டது என்பது குறித்து அமெரிக்க போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விமானத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

#WATCH | An aircraft carrying the message 'Release Imran Khan' is seen above Nassau, New York, where India is playing against Pakistan in the T20 World Cup pic.twitter.com/tYxrbKcY7C

— ANI (@ANI) June 9, 2024

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்