ஒரே விமானத்தில் உயிரிழந்த அனைவரின் உடல்.. குவைத் செல்கிறது இந்திய விமானப்படையின் விமானம்..!

Mahendran

வியாழன், 13 ஜூன் 2024 (10:44 IST)
குவைத்தில் நடந்த தீ விபத்தில் இந்தியர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடலை கொண்டுவர இந்திய விமானப்படையின் விமானம் குவைத் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
குவைத் நாட்டில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் அதில் இந்தியர்கள் மட்டுமே 40க்கும் மேற்பட்டவர்கள் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் என்றும் கூறப்படுகிறது. 
 
நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டபோது தூங்கிக் கொண்டிருந்த பலர் புகையை சுவாசித்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்று கூறப்படும் நிலையில் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது. 
 
மேலும் குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இந்தியர்களின் உடலை மீட்கும் பணியில் இருக்கும் நிலையில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் குவைத் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் என்பதை இந்திய விமானப்படையில் விமானம் குவைத் செல்வதாகவும் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை கொண்டு வர இந்த விமானம் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், உயிரிழந்த அனைவர் உடல்களையும் ஒரே விமானத்தில் கொண்டு வரும் விதமாக மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்