பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப தகவல் விற்ற இந்திய உளவாளி கைது...

செவ்வாய், 9 அக்டோபர் 2018 (16:45 IST)
கடந்த 1998 ஆம் ஆண்டுமுதல் இந்தியா - ரஷ்யா இரு நாடுகளிடையேயான  ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பிரமோஷ் ஏரோபஸ் தளம் இந்தியாவின் ஏவுகணை பாதுகாப்பு மையமாக  செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த மையத்தில்  நான்கு ஆண்டுகளாக தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய நிஷாந்த் அகர்வால் என்பவர் பேஸ்புக் வாயிலாக ஆசைக்கு  ஆளாகி ,பணத்துக்கு தூண்டப்பட்டு தகவல்களை அவர் பாகிஸ்தானில் ஐஎஸ்ஐக்கு விற்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.
 
அதே சமயம் அவர் பல்வேறு நாடுகளுக்கு உளவு பார்த்துள்ளதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 
மேலும் இவரது சொந்த கணினியிலிருந்தும் சில முக்கிய தகவல்கள் கண்டுபிடிக்கப்ப்பட்டுள்ளதாக உத்திரபிரதேச ஏடிஎஸ் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். இவரிடம் போலீஸார் பல கட்ட விசாரணைகளை துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
நிஷாந்த் அகர்வால் குருஷேத்ரா என்.ஐ டி.யில் எஞ்சினியரிங் படித்தபோது கோல்ட் மெடல் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்