பிரிட்டிஷ் சின்னம் நீக்கம்! – இந்திய கடற்படையின் புதிய கொடி!

வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (13:05 IST)
இந்திய கடற்படையில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரிட்டிஷ் சின்னம் நீக்கப்பட்டு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையின் கொடியில் நீண்ட காலமாக செயிண்ட் ஜார்ஜ் க்ராஸ் இடம்பெற்று வந்தது. இன்று இந்தியாவின் சொந்த தயாரிப்பான விக்ராந்த் போர்க்கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள நிலையில் கடற்படையின் கொடியில் உள்ள சின்னமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

செயிண்ட் ஜார்ஜ் க்ராஸை நீக்கி அதற்கு பதிலாக சத்ரபதி சிவாஜி மன்னரின் அரச முத்திரையை குறிக்கும் எண்கோண வடிவிலான புதிய கொடியை இந்திய கடற்படை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் கடற்படையின் சின்னத்திலிருந்த பிரிட்டிஷ் அடையாளங்கள் நீக்கப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர்.

The ensign of Indian Navy has been changed today.
St George’s Cross has been dropped.
Indian Navy crest in an octagon representing royal seal of Chhatrapati Shivaji Maharaj form new ensign.
Long-awaited decolonisation continues at rapid pace.#AzadiKaAmritMahotsav
Watch: pic.twitter.com/WHUT4Hx7JG

— Kanchan Gupta

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்