அக்னிபத் திட்டம் மூலம் 9.55 லட்சம் பேர் விண்ணப்பம்: இந்திய கடற்படை!

புதன், 3 ஆகஸ்ட் 2022 (17:00 IST)
அக்னிபத் திட்டத்தில் சேர 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று இந்திய கடற்படை தகவல்.


இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகால தற்காலிக பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் பலர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு எழுந்தது. எனினும் இந்த திட்டத்தில் சேர்வதற்கான அறிவிப்புகளை இந்திய ராணுவம் வெளியிட்டது.

அதன்படி அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 24 ஆம் தேதி முதல் பெறப்பட்டன. விமானப்படையில் சேர்வதற்கு முதல் நாளில் மட்டும் 3,800 பேர் விண்ணப்பித்திருந்ததாக செய்திகள் வெளியானது.

தற்போது மொத்தமாக இந்த திட்டத்தில் பணியில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முந்தைய காலத்தில் 6.31 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்த நிலையில் அக்னிபத் திட்டத்தில் அதிக அளவிலான இளைஞர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அக்னிபத் திட்டத்தில் சேர 9.55 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. 82,000 பெண்கள் உட்பட 9.55 லட்சம் பேர் அக்னிபத் திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்