40 நாள் போருக்கு தயராகும் இந்திய ராணுவம்!!

செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:06 IST)
இந்திய ராணுவம் இந்த ஆண்டு இலக்காக 40 நாள் போருக்கு தயாராகும் வகையில் ஆயத்தப்படுத்தி வருகிறதாம். 

 
ஆம், இந்திய ராணுவம் 40 நாள்கள் வரை தொடர்ந்து போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களை தயார்படுத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
மொத்தம் 13 லட்சம் வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவம் படிப்படியாக ராக்கெட், ஏவுகணை, பீரங்கி வாகனங்கள், வெடிகுண்டுகள் என 40 நாள்கள் போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்களைக் குவித்து வருகிறது.
 
ராணுவத்தில் வழக்கமாக 10 நாள்கள் முழு வீச்சுடன் போரிடுவதற்குத் தேவையான ஆயுதங்கள் தயார் நிலையில் இருக்கும். இதை, வரும் 2022- 2023 ஆம் ஆண்டுக்குள் 40 நாள்களுக்குத் தேவையான அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
ஆயுதங்களை இருப்பில் வைப்பதால், இந்தியா போருக்குத் தயாராகி விட்டது என்று அர்த்தமில்லை என்றும்  தகவல் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்