இந்திய எல்லையில ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினர்… தடுத்து நிறுத்திய இந்திய ராணுவம்

வெள்ளி, 8 அக்டோபர் 2021 (12:06 IST)
இந்திய மற்றும் சீனா எல்லைப் பகுதிகள் சமீபகாலமாக பதற்றமான பகுதிகளாக மாறி வருகின்றன.

இதற்கு முக்கியக் காரணம் சீனா இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயல்வதே என சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் 200 சீன இராணுவத்தினர் பும் லா மற்றும் யாங்சே ஆகிய கனவாய் பகுதிகளுக்கு அருகே இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளனர்.

அவர்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி இப்போது தற்காலிகமாக சிறைப் பிடித்துள்ளது. பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் அனுப்பப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது சம்மந்தமாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்