கொரோனா மூன்றாம் அலையை தடுப்பது கடினம்! – விஞ்ஞான ஆலோசகர் அதிர்ச்சி தகவல்!

வியாழன், 6 மே 2021 (09:16 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வீரியமடைந்துள்ள நிலையில் மூன்றாம் அலையை தடுப்பது கடினம் என மத்திய அரசின் விஞ்ஞான ஆலோசகர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் மருத்துமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் நாடு முழுவதும் பல இடங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து பேசியுள்ள மத்திய அரசின் விஞ்ஞான ஆலோசகர் விஜயராகவன் “பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் நீடிக்கும் நிலையில் தொடர்ந்து வரும் மூன்றாம் அலையை தடுப்பது மிகவும் கடினம்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்