200% வரி, ரூ.3500 கோடி அவுட்... நெருக்கும் இந்தியா திணறும் பாகிஸ்தான்!

திங்கள், 18 பிப்ரவரி 2019 (15:31 IST)
காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது நடத்தப்பட்டல்வாம் வெடிகுண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தானின் தூண்டுதல் இருந்துள்ளது. 
 
எனவே, பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதோடு, பாகிஸ்தானுக்கு 23 ஆண்டுகளாக வழங்கப்பட்ட மிகவும் ஃபேவரைட் நாடு என்ற அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.
 
1996 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த அந்தஸ்து வழங்கப்பட்டால், அந்த நாடுகளில் இருந்து எளிதாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய முடியும். இந்த அந்தஸ்து கொண்ட நாட்டு பொருட்கள் மீது வரி குறைவாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
எனவே, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய அரசின் இம்முடிவால் பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3,500 கோடி அளவில் வர்த்தகப் பாதிப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த வரி உயர்வு நடவடிக்கையானது இந்தியா பாகிஸ்தான் மீது தொடுக்கும் வர்த்தகப்போர் என கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்