தற்போது செல்போனில் மட்டுமே ப்ரிபெய்டு உள்ளது. இனிமேல் பெட்ரோல் பங்க், மின்சார கட்டணம், டோல்கேட் கட்டணம் என முக்கிய செலவினங்கள் அனைத்துமே இன்னும் மூன்று வருடங்களில் ப்ரிபெய்டு மயமாகிவிடுமாம்
இந்த முறையால் இனிமேல் பொதுமக்கள் முன்கூட்டியே தங்கள் தேவைக்கு பணத்தை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதே நேரத்தில் காரில் குறைவான பெட்ரோல் போட்டுவிட்டு அதிகமாக பணம் வசூலிக்க முடியாது. எவ்வளவு பெட்ரோல் போடப்பட்டதோ, அதற்கான தொகை மட்டுமே கழியும்.